1933ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி இந்திய குடியரசின் முன்னாள் பிரதமரான ஹெச்.டி.தேவ கௌடா, மைசூரில் பிறந்தார்.
1929ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி உலகளாவிய புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளர் வெ.இராதாகிருஷ்ணன் சென்னையில் பிறந்தார்.
1974ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி சிரிக்கும் புத்தர் என்று பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாக சோதித்தது.
தமிழின அழிப்பு நாள் : இலங்கையின் வடக்கு மாகாண சபையில் மே 18-ம் தேதி தமிழின அழிப்பு நாள் என பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய தினம் :-
சர்வதேச அருங்காட்சியக தினம்
ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் தேதி உலகளாவிய ரீதியில் சர்வதேச அருங்காட்சியக தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கும் அதேபோல் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், இத்தினம் 1977ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகின்றது.
உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம்
உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் ஆண்டுதோறும் மே 18ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. எச்.ஐ.வி. தடுப்பூசி ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை பற்றி நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் 1998ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது.
தடுப்பூசி கண்டுபிடிப்பதன் மூலம் எய்ட்ஸ் ஆபத்தை குறைக்க முடியும். இதனை கண்டுபிடிக்க விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் முயன்று வருகின்றனர். எச்.ஐ.வி தடுப்பூசியை கண்டுபிடிக்க ஒன்றாக இணைந்து செயல்பட்ட விஞ்ஞானிகள் ஆகியோரை அங்கீகரிக்கவும், நன்றி செலுத்தும் விதமாகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
பிறந்த நாள் :-
ஹெச்.டி.தேவ கவுடா
ஹெச்.டி.தேவ கவுடா என்று பரவலாக அறியப்படும் ஹரதனஹல்லி டொட்டெகௌடா தேவெ கௌடா 1933 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள் மைசூரில் பிறந்தார்.
இவர் இந்தியக் குடியரசின் 11 பிரதமராகவும், கர்நாடக மாநிலத்தின் பதினொன்றாவது முதல் அமைச்சராகவும் இருந்தவர் ஆவார்.
1962ஆம் ஆண்டில் மாநிலச் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980ல் அக்கட்சி பிளவுபட்டபோது ஜனதா தளம் கட்சியை உருவாக்க பெரும் பங்காற்றினார்.
1999இல் ஜனதா தளம் கட்சியிலிருந்து வெளியேறி ஜனதா தளம் (எஸ்) என்ற கட்சியை உருவாக்கி அதன் தலைவராக இன்றளவும் உள்ளார்.