குறள் : 376
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.
மு.வ உரை :
ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா.
கலைஞர் உரை :
தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.
சாலமன் பாப்பையா உரை :
எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது.
Kural 376
Pariyinum Aakaavaam Paalalla Uyththuch
Choriyinum Pokaa Thama
Explanation :
Whatever is not conferred by fate cannot be preserved although it be guarded with most painful care; and that which fate has made his cannot be lost although one should even take it and throw it away
இன்றைய பஞ்சாங்கம்
17-05-2021, வைகாசி 03, திங்கட்கிழமை, பஞ்சமி திதி பகல் 11.35 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 01.21 வரை பின்பு பூசம். அமிர்தயோகம் பகல் 01.21 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் - 17.05.2021
மேஷம்
இன்று குடும்பத்தில் அசையா சொத்து வழியில் செலவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் தீரும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நற்செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
மிதுனம்
இன்று வேலையில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை தோன்றும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கடகம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். பண வரவுகளில் இருந்த தடைகள் விலகும். தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும். உடன் பிறப்புகள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
கன்னி
இன்று உங்களுக்கு இனிய செய்திகள் வந்து சேரும். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும்.
துலாம்
இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எந்த வேலையையும் புது பொலிவுடனும், தெம்புடனும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவிகள் கிடைக்ககூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் ரீதியாக வெளிமாநில தொடர்பு ஏற்படும். பொன் பொருள் சேரும்.
விருச்சிகம்
இன்று எடுத்த காரியத்தை தடையின்றி செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. தொழிலில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடையலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
தனுசு
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது உத்தமம். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
மகரம்
இன்று உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழிலில் இ-ருந்த எதிரிகளின் தொல்லை குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். பண வரவு தாராளமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.
மீனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்பின்றி ஈடுபடுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்ப ஒற்றுமை சற்று குறையும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று லாபம் பெருகும்.