ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு தாலுகாவில் கடந்த 17ம் தேதி வரை 1,280 பேரிடம் ₹4 லட்சத்து 90 ஆயிரத்து 600 வசூலிக்கப்பட்டது.

அதேபோல் அரக்கோணம் தாலுகாவில் 650 பேரிடம் ₹1 லட்சத்து 46 ஆயிரத்து 800ம், நெமிலி தாலுகாவில் 574 பேரிடம் ₹1 லட்சத்து 37 ஆயிரத்து 300ம், சோளிங்கர் தாலுகாவில் 644 பேரிடம் ₹1 லட்சத்து 58 ஆயிரத்து 800ம், வாலாஜா தாலுகாவில் 865 பேரிடம் 3 லட்சத்து 2 ஆயிரமும், கலவை தாலுகாவில் 612 பேரிடம் 31 லட்சத்து 30 ஆயிரத்து 500ம் வசூலிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 18ம் தேதி வரை 4,625 பேரிடம் ₹13.66 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதில் ஆற்காடு தாலுகாவில் அதிக பட்சமாக அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.