ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் கிருஷ்ணாபுரம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் 4 வயது ஆண் புள்ளி மான் ஒன்று நாய் கடித்து துரத்தியதில் தவறி விழுந்து விட்டதாக சென்னை நவீன கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேற்று ராணிப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் நிலைய அலுவலர் வ.ஹரிகிருஷ்ணன் தலைமையிலான மீட்பு குழுவினருடன் விரைந்து சென்று கிணற்றில் தவித்த புள்ளி மானை உயிருடன் மீட்டு ராணிப்பேட்டை வனச்சரக அலுவலர் கந்தசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் வனக்காவலர் சுப்பிரமணி மேற்கண்ட புள்ளி மானை ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் வனக் காப்புக்காட்டில் விட்டார்.