தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பராமரிப்பு பணிகள் மேட்டூர் செக்கானூரில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் வருகிற 23-ந் தேதி முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை குடிநீர் வினியோக அளவு குறைக்கப்படும். இதனால் இந்த திட்டத்தின் பயனாளிகளான ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட ஆற்காடு, ராணிப்பேட்டை, மேல்விஷாரம், அரக்கோணம் மற்றும் வாலாஜா ஆகிய 5 நகராட்சிகளுக்கும், ஆற்காடு மற்றும் வாலாஜா ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களுக்கும் குடிநீர் கையிருப்புக்கு ஏற்ப குறைந்த அளவு வினியோகிக்கப்படும். 

எனவே குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும், இந்த நாட்களில் பற்றாக்குறையை சமாளிக்க உள்ளூர் குடிநீரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

இந்த தகவலை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய வேலூர் பராமரிப்பு கோட்ட நிர்வாக பொறியாளர் தெரிவித்தார்.