கலவை தாலுகாவில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த அனைத்து கிராமங்களிலும் குழு அமைத்து கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கலவை அடுத்த பாலி ஊராட்சியில் 100 வேலை திட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தாசில்தார் நடராஜன் தலைமையில் வருவாய்துறை, சுகாதாரத்துறை மற்றும் மகளிர் குழுவினர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து தற்காத்து கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், கைகளை எவ்வாறு சோப்பு போட்டு கழுவுவது, கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதன் அவசியம் குறித்து விளக்கம் அளித்தனர்.