ராணிபேட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுரைப்படி வாலாஜா நகராட்சிக்குட்பட்ட நேதாஜி தெரு, கடம்பராயர் தெரு, எம்.ஜி.ஆர் நகர் ஆகிய பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு குழுவின் பணி தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட சார் ஆட்சியர் இளம்பகவத் இன்று வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் குறித்தும் மக்கள் அனைவரும் வெளியில் செல்லும்போது கட்டாயம் முககவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கி ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வாலாஜா வட்டாட்சியர் ஜெயபிரகாஷ், வாலாஜா நகராட்சி ஆணையர் சதீஷ்குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.