குஜராத்தில் கொரோனா வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 நோயாளிகள் இறந்தனர். அதைத்தொடர்ந்து கொரோனா வார்டுகளில் தீ விபத்தை தடுப்பது குறித்து, பயிற்சி அளிக்க, தமிழ்நாடு தீயணைப்பு துறை இயக்குனர் சைலேந்திரபாபு அனைத்து தீயணைப்பு நிலையங்களுக்கும் உத்தரவிட்டார்.

அதன்பேரில் நேற்று தீயணைப்பு துறை சார்பில், ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் வார்டுகளில், தீ விபத்தை எப்படி தடுப்பது என்பது குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட தீயணைப்பு அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். உதவி மாவட்ட அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இதில் மருத்துவ மனைகளில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க விழிப்புணர்வுடன் இருப்பது குறித்தும், தீயணைப்பான்களை உபயோகப்படுத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அன்பு சுரேஷ், வாலாஜா அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டுகளை கண்காணிக்கும் பணியாளர்கள், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.