தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு என அறிவிப்பு

மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான தனியார், அரசுப் பேருந்து போக்குவரத்துக்கு தடை

வாடகை டாக்சி, ஆட்டோக்கள் ஆகியவை இயங்கவும் தடை

அத்தியாவசியப் பணிக்கு செல்வோர் உரிய ஆவணங்களுடன் பயணிக்க அனுமதி

முழு ஊரடங்கு

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளளது. இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் சுமார் 4 லட்சம் வரை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால் மாநிலங்கள் தோறும் பல நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் கொரோனா கட்டுப்பாடுகளாக இரண்டு வாரம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.