ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை முதல் நடைமுறைக்கு வரும் புதிய கட்டுப்பாடுகளைப் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தின் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டப்படி ஊரடங்கு உத்தரவு பல்வேறு அமலிலிருந்து வருகிறது.
குறிப்பாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்று பரவலைத் கருத்தில் கொண்டு நோய்த்தொற்றைத் தடுக்கும் வகையில், தமிழக அரசு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் தனியார் அலுவலர்களும் அதிகபட்சம் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப் படுகிறது தனியார் பேருந்துகள் அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.
3ஆயிரம் சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட பெரிய கடைகள் வணிக வளாகங்கள் இயங்க ஏப்ரல் 26ஆம் தேதி முதல் ஏற்கனவே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை இவைத்தவிர தனியாகச் செயல்படுகின்ற பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் குளிர்சாதன வசதியின்றி 12 மணிவரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
இவற்றில் ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.