ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை கண்காணிக்கவும், அதை தடுக்கவும் 9 போலீஸ் நிலையங்களில் பெண் போலீஸ் ஒருவர் நியமிக்கப்பட்டார். அதற்காக போலீஸ் நிலையங்களில் பெறப்படும் புகார்களின் எண்ணிக்கையைப் பொறுத்து வாலாஜா, ஆற்காடு டவுன், திமிரி, கலவை, ராணிப்பேட்டை அனைத்து மகளிர், அரக்கோணம் டவுன், சோளிங்கர், காவேரிப்பாக்கம், அரக்கோணம் அனைத்து மகளிர் ‌ஆகிய 9 போலீஸ் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டன.‌


இப்பணியில் ஈடுபட உள்ள போலீசாருக்கு மொபட், மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நடந்தது. வேலூர் சரக டி.ஐ.ஜி.‌ காமினி தலைமை தாங்கி, மொபட், மடிக்கணினியை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு பூரணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.