ராணிப்பேட்டை தனியார் மருந்து உற்பத்தி நிறுவனம் சார்பில் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளைக கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம் நேற்று வழங்கினர். 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்துவது தொடர்பாக கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் கடந்த 10ம் தேதி ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், ராணிப்பேட்டை தனியார் மருந்து நிறுவனம் சார்பில் கொரோனாதொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகளை வழங்க வேண்டும் என மருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் ஆர்டிஓ இளம்பகவத் கேட்டுக்கொண்டார். 

அதன்பேரில் தனியார் மருந்து உற்பத்தி நிறுவனம் சார்பில் 880 இனோக்ஸ்சபேரின் (40 எம்ஜி), 3,000 அட்டைகள் அசித்ரோமைசின் (500 எம்ஜி), 500 அட்டைகள் ஐவர்மெக்டின் (12 எம்ஜி) உள்ளிட்ட மருந்துகள் தயாரிக்கப்பட்டு நேற்று கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம் வழங்கப்பட்டது. 

மேலும், 11,000 அசித்ரோமைசின் மாத்திரைகள் நாளை (இன்று) வழங்கப்பட உள்ளதாக மருந்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.