ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த செய்யாத்துவண்ணம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(56). இவர் கடந்த சில ஆண்டுகளாக மனநிலை பாதிப்பு மற்றும் வயிற்று வலியால் அவதிப் பட்டுள்ளார். 

நேற்று முன்தினம் காலை வெங்கடேசன் வீட்டில் இருந்தார். அப்போது அவரது மனைவி சசிகலா, ஊரில் நடந்த கோயில் கும்பாபிஷேகத்திற்கு வரும்படி அழைத்துள் ளார். ஆனால் வெங்கடேசன் செல்ல மறுத்துள்ளார். பின்னர் வேகமாக வீட்டின் பின்புறத்தில் உள்ள மாட்டுக்கொட்டகைக்கு சென்ற அவர், மண்ணெண்ணெய் எடுத்து தலையில் ஊற்றி தீக்குளித்துள்ளார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சசிகலா கூச்ச லிட்டார். உடனே விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் வெங்கடேசனை மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வெங்கடேசன் இறந்தார். 

இதுகுறித்து கலவை போலீசில், சசிகலா கொடுத்த புகாரின் பேரில் சப்இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.