ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை பாரதிய ஜனதா கட்சி சார்பில் மேற்கு வங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம்மீது தாக்குதல் நடத்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சிவமணி தலைமை தாங்கினார். மேலும், இதில் முருகன் முருகேசன் சம்பத்குமார் காசி , யமுனா ஜெகன், மற்றும் மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேற்று திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராகவும் மம்தா பானர்ஜி எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.