தேர்தல் முடிவுகளில் தி.மு.க. முன்னணி என்று இன்று காலையில் வர தொடங்கியதும் தி.மு.க. தொண்டர்கள் வெளியில் வர தொடங்கினார்கள்.
முழு ஊரடங்கு கட்டுப்பாடு இருந்த போதிலும் தேர்தல் வெற்றி உற்சாகத்தில் அறிவாலயத்தில் குவியத் தொடங்கினார்கள்.

இதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகளை ஊரடங்கை மீறி கூடிய இந்த கூட்டத்தை தடுக்கத் தவறிய புகாரில் தேனாம்பேட்டை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் மேற்கு வங்கம் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வெற்றி பெற்ற கட்சிகள் கொரோனா விதிமுறைகளை மீறி வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் அவற்றை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள் என 5 மாநில தலைமை செயலாளருக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அவசரக் கடிதம் எழுதியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.