ஆற்காடு அடுத்த திமிரியில் ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அந்த தெருவில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ஆற்காடு அடுத்த திமிரி பேரூராட்சி, சஞ்சீவராயன்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவில் ஒரே குடும்பத்தில் இரண்டு ஆண், இரண்டு பெண்கள் என மொத்தம் நான்கு பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானது.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் பேரூராட்சி சார்பில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அந்த தெருவில் இரண்டு பக்கமும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப் பட்டுள்ளது.