ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 தொகுதிகளில் இன்று நடை பெறும் வாக்கு எண்ணிக்கையின் சுற்று விவரங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 6ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளது. இதற்கான ஏற்பாட்டினை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, அரக்கோணம், ஆற்காடு, சோளிங்கர் ஆகிய 4 தொகுதிகளில், அரக்கோணம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சு.ரவி, விடுதலை சிறுத் தைகள் கட்சி வேட்பாளர் கவுதமசன்னா உட்பட 14 பேர் போட்டி யிடுகின்றனர். 

அதேபோல் சோளிங்கர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்தினம், பாமக வேட்பாளர் கிருஷ்ணன் உள்பட 19 பேரும், ராணிப்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் ஆர்.காந்தியும், அதிமுக சார்பில் சுகுமார் உட்பட 15 பேரும் போட்டியிடுகின்றனர். ஆற்காடு தொகுதியில் திமுக சார்பில் ஈஸ்வரப், பாமக சார்பில் இள வழகன் உட்பட 13 பேரும் போட்டியிட்டுள்ளனர். 

இவர்களுக்கு பதிவான வாக்குகள் இன்று ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது. அதன் படி ஒரு சுற்றுக்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டு பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. அரக்கோணம் தொகுதியில் 317 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளும், சோளிங்கர் தொகுதியில் 387 வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகள் 28 சுற்றுகளும், ராணிப்பேட்டை தொகு தியில் 375 வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகள் 27 சுற்றுகளும், ஆற்காடு தொகுதியில் 365 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 27 சுற்றுகள் எண்ணப்படுகிறது. 

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்டதேர்தல் ஆணையம் செய்துள்ளது. இன்று காலை சுமார் 9 மணியளவில் தொகுதிகளில் முன்னணி நிலவரம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.