ஆற்காடு பகுதியில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 8 பேரின் உடல்களை தமுமுக மற்றும் மமகவினர் ஒரே நாளில் அடக்கம் செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தனலட்சுமி நகர், தாஜ்புரா, அரப்பாக்கம், ஆயிலம்புதூர், இந்திரா நகர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 8 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆற்காடு, வாலாஜா மற்றும் வேலூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்து பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடலை ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மற்றும் மேல்விஷாரம் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் கைப்பற்றி உயிரிழந்தவர்களின் சொந்த மதத்தின் படி சொந்த ஊர்களில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர். தமுமுக மற்றும் மமகவினரின் செயலை பல்வேறு தரப்பினர் பாராட்டினார்கள். மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் ஆற்காடு பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.