டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 5-ம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. காலை 11 மணியளவில் நடைபெறும் இந்தக்கூட்டத்தில் முக்கிய துறை அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்தக்கூட்டத்தில் மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறைகள் மற்றும் படுக்கைகளுக்கு தட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
மேலும் இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், அமெரிக்க அரசின் தலைமை மருத்துவரான அந்தோணி பவுசி முதல் ராகுல்காந்தி வரை பலரும் நாடு முழுவதும் தற்காலிக ஊரடங்கை பிறப்பிக்க வேண்டும் என யோசனை தெரிவித்து வருகின்றனர். மேலும் 5 மாநில தேர்தல்களும் முடிவடைந்துள்ள நிலையில் நடைபெறும் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.