குறள் : 355
எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

மு.வ உரை :
எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு.

கலைஞர் உரை :
வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்.

சாலமன் பாப்பையா உரை :
எந்தப் பொருளானாலும், அது எப்படிக் காட்சி தந்தாலும், அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல், உள்ளடக்கமாகிய உண்மைப் பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.

Kural 355
Epporul Eththanmaith Thaayinum Apporul
Meypporul Kaanpadhu Arivu

Explanation :
(True) knowledge is the perception concerning every thing of whatever kind that that thing is the true thing



இன்றைய பஞ்சாங்கம்
27-04-2021, சித்திரை 14, செவ்வாய்க்கிழமை, பௌர்ணமி திதி காலை 09.01 வரை பின்பு பிரதமை திதி பின்இரவு 05.15 வரை பின்பு தேய்பிறை துதியை. சுவாதி நட்சத்திரம் இரவு 08.08 வரை பின்பு விசாகம். சித்தயோகம் இரவு 08.08 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். 

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் - 27.04.2021

மேஷம்
இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.

ரிஷபம்
இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும்.

மிதுனம்
இன்று உறவினர்கள் வருகையால் மனநிம்மதி குறையலாம். கொடுத்த கடன் பெறுவதில் தாமதம் உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கடகம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உற்றார் உறவினர்களுடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறையும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக பகை நீங்கும். சேமிப்பு உயரும்.

சிம்மம்
இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும். 

கன்னி
இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டி இருக்கும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். புதிய பொருட்களை வாங்கும் போது கவனமாக இருப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

துலாம்
இன்று பிள்ளைகள் வழியில் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும். உங்கள் மீதிருந்த பழிச்சொற்கள் நீங்கும். ஆன்மீக காரியங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.

விருச்சிகம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் நற்பலன்கள் கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழச்சியை தரும்.

தனுசு
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். இதுவரை இருந்த குழப்பங்கள் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். உத்தியோக ரீதியான பயணங்களில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். சுப காரிய பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். 

மகரம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களால் உங்கள் பிரச்சினைகள் குறையும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடைவீர்கள். உத்தியோகத்தில் சக நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

கும்பம்
இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் இருந்த தேக்க நிலை பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் மாறும். சுபகாரியங்கள் கைகூடும்.

மீனம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,