குறள் : 350
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

மு.வ உரை :
பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும் உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.

கலைஞர் உரை :
எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும். துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்.

சாலமன் பாப்பையா உரை :
ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.

Kural 350
Patruka Patratraan Patrinai Appatraip
Patruka Patru Vitarku

Explanation :
Desire the desire of Him who is without desire; in order to renounce desire desire that desire



இன்றைய பஞ்சாங்கம்
21-04-2021, சித்திரை 08, புதன்கிழமை, நவமி திதி இரவு 12.35 வரை பின்பு வளர்பிறை தசமி. பூசம் நட்சத்திரம் காலை 07.58 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. ஸ்ரீ ராம நவமி. நவகிரக வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 

இன்றைய ராசிப்பலன் - 21.04.2021

மேஷம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உடனிருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றத்தை காண முடியும். எதிலும் பொறுமை தேவை.

ரிஷபம்
இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். குடும்பத்தினர் அன்புடன் நடந்து கொள்வார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.

மிதுனம்
இன்று குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் சற்று கவனம் தேவை. உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். கொடுத்த கடன் வசூலாகும். 

கடகம்
இன்று உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சாதகமான பலனை அடைவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.

சிம்மம்
இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். நெருங்கியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

கன்னி
இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளி பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

துலாம்
இன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அதிக லாபம் அடைவீர்கள்.

விருச்சிகம்
இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கேற்ப நற்பலன்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

தனுசு
இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வேலையில் உங்கள் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்
இன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும். சேமிப்பு உயரும்.

மீனம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். செய்யும் செயல்களில் ஆர்வம் குறைந்து காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும். கடன் பிரச்சினைகள் குறையும்.

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,