குறள் : 346
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்.

மு.வ உரை :
உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன் தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.

கலைஞர் உரை :
யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான்.

சாலமன் பாப்பையா உரை :
உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான்.

Kural 346
Yaan Enadhu Ennum Serukku Aruppaan Vaanorkku
Uyarndha Ulakam Pukum

Explanation :
Shall enter realms above the powers divine



இன்றைய பஞ்சாங்கம்
17-04-2021, சித்திரை 04, சனிக்கிழமை, பஞ்சமி திதி இரவு 08.33 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்இரவு 02.33 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. 

இராகு காலம் - காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசிப்பலன் - 17.04.2021

மேஷம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கலாம். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலப்பலன்கள் கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.

ரிஷபம்
இன்று உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். வேலையில் மேலதிகாரிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும்.

மிதுனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார்கள்.

கடகம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.

சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

கன்னி
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உற்றார் உறவினர்களுடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் தோன்றலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

துலாம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகலாம். தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு பகல் 1.10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் அவசரம் காட்டாமல் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. மதியத்திற்கு பிறகு இருக்கும் குழப்பங்கள் குறையும்.

விருச்சிகம்
இன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 1.10 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் சுப காரியங்கள் எதையும் செய்யாமல் இருப்பது, பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு
இன்று உங்களுக்கு தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற நற்பலன்கள் கிட்டும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். 

மகரம்
இன்று உறவினர்களால் வீண் செலவு ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.

கும்பம்
இன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். தொழில் வியாபார ரீதியான புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 

மீனம்
இன்று உத்தியோகத்தில் மனம் மகிழும் மாற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றியை தரும். கொடுத்த கடன் வசூலாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,