குறள் : 345
மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க் குடம்பும் மிகை.
மு.வ உரை :
பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ.
கலைஞர் உரை :
பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும்போது, அதற்கு மேலும் வேறு தொடர்பு எதற்காக?.
சாலமன் பாப்பையா உரை :
இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பை?யே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?.
Kural 345
Matrum Thotarppaatu Evankol Pirapparukkal
Utraarkku Utampum Mikai
Explanation :
What means the addition of other things those who are attempting to cut off (future) births when even their body is too much (for them)
இன்றைய பஞ்சாங்கம்
16-04-2021, சித்திரை 03, வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி மாலை 06.06 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. ரோகிணி நட்சத்திரம் இரவு 11.40 வரை பின்பு மிருகசீரிஷம். மரணயோகம் இரவு 11.40 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 16.04.2021
மேஷம்
இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய பேச்சுகளில் சாதகமான பலன் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சிலருக்கு புதிய பொருள், வண்டி, வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலன்களை அடையலாம்.
கடகம்
இன்று உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். திடீர் பணவரவு உண்டாகும். கடன் பிரச்சினை தீரும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும்.
கன்னி
இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளால் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் கிட்டும்.
துலாம்
இன்று உங்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்ல வேண்டும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் சிக்கல்களை தவிர்க்கலாம். வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் லாபம் தடைப்படாது. மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.
தனுசு
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் பணிசுமை குறையும்.
மகரம்
இன்று உங்களுக்கு வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சில தடங்கல்கள் ஏற்படலாம். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.
கும்பம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களுடன் வீண் வாக்கு வாதங்கள் தோன்றும். பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் நிறைவேறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்பட்டாலும் குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.
மீனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,