ஆற்காடு அடுத்த தாஜ்புரா ஏரிக்கு செல்லும் வழியில் நேற்று முன்தினம் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதை கண்ட பொதுமக்கள் , விஏஓ மஞ்சுநாதனுக்கு தகவல் கொடுத்தனர் .

இதுகுறித்து மஞ்சுநாதன் ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தார் . அதன் பேரில் சப்இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மூதாட்டி யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர் . மேலும் அவர் வெயில் கொடுமை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து இறந்திருக்கலாம் எனக்கருதப்படுகிறது . இதுதடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.