ஆற்காடு ஜீவானந்தம் சாலையில் முழு ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட அழகு நிலையத்திற்கு தனித்துணை ஆட்சியர் (கலால்) சத்ய பிரசாத் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர். உடன் தாசில்தார் காமாட்சி. 

ஆற்காடு, முழு ஊரடங்கு உத்தரவை மீறி நேற்று ஆற்காட்டில் செயல்பட்ட அழகு நிலையத்திற்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஞாயிற் றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும், இன்று முதல் தியேட்டர்கள், பெரிய கடைகள், மால்கள், மது பார்கள் செயல்பட அனுமதி இல்லை, மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் திறக்க அனுமதி இல்லை என் பன உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது.

 இந்நிலையில், நேற்று ஞாயிறு முழு ஊரடங்கை முன்னிட்டு தனித்துணை ஆட்சியர் (கலால்) சத்ய பிரசாத் தலைமையில், தாசில்தார் காமாட்சி மற்றும் வருவாய்த்துறையினர் ஆற்காடு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அண்ணா சிலை அருகே ஜீவானந்தம் சாலையில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட அழகு நிலையத்திற்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.