ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த மேலப்புலம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 26). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இன்று அதிகாலையில் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஓச்சேரி நோக்கி சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது திடீரென மோதியதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்