12 ஆம் வகுப்பு தேர்வு திட்டமிட்டப்படி தொடரும். ஆனால், மே 3ம் தேதி நடைபெறவிருந்த பிளஸ் 2 மொழிப்பாடத் தேர்வு (முதல் தேர்வு ) மே 31ம் தேதிக்கு மாற்றப்படும் என தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
2020-21-ம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மே மாதம் 3-ம் தேதி தொடங்கி 21- தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 2-ம் தேதி அன்று நடைபெறுவதால் 3-ம் தேதி அன்று நடைபெறுவதாக இருந்த மொழிப்பாடத்தேர்வு மட்டும் 31-ம் தேதி அன்று நடைபெறும். மேலும்தேர்வுகள் நடைபெறும்போது பின்பற்றவேண்டிய விரிவான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் தெரிவிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.