பொது முடக்கத்தை அமல்படுத்தும் போது மாநில அரசுகள் அதனை கடைசி ஆயுதமாக தான் செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே கூறியதாவது:

கொரோனா காலத்தில் கடுமையாக உழைக்கும் முன் களப் பணியாளர்களுக்கு எனது மிகப்பெரிய வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இக்கட்டான சூழலில் நாட்டு மக்கள் அனைவரும் கடுமையான துயரத்தை அனுபவிக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரிகிறது உங்களது வருத்தங்களை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

கொரோனா இரண்டாவது அலை சூறாவளி போல் நாட்டைத் தாக்கி வருகிறது இந்த நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்
நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தால் கொரோனாவை முறியடிக்க இயலும் என நம்புகிறேன். தற்போதைய கொரோனா பாதிப்பில் இருந்து நம்மால் மீண்டுவர முடியும். கொரோனா தடுப்பு சம்பந்தமான எந்த ஒரு வசதிகளும் நம்மிடம் இல்லாமல் இருந்தது.

முகக்கவசம் தயாரிப்பு முதல் வெண்டிலட்டர் தயாரிப்பு வரை கடந்த சில மாதங்களில் தான் நாம் பெரிய அளவில் மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்கி இருக்கிறோம். ஒவ்வொரு இந்தியரும் தனது சக இந்தியருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.
 இளைஞர்கள் கொரோனா தடுப்பிற்கு எதிரான போரில் சரியான விஷயங்களை செய்ய முன்வர வேண்டும்.

இளைஞர்கள் கொரோனா தடுப்பிற்கு எதிரான போரில் சரியான விஷயங்களை செய்ய முன்வர வேண்டும்.வீட்டில் உள்ள பெரியவர்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதை தடுப்பது அந்த வீட்டில் உள்ள குழந்தைகளின் பொறுப்பு.

பொது முடக்கத்தை அமல்படுத்தும் போது மாநில அரசுகள் அதனை கடைசி ஆயுதமாக தான் செய்ய வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்