கொரோனா நோய்த்தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாததால் ஆற்காடு வேலூர் மெயின்ரோட்டில் உள்ள மெடிக்கல் ஷாப்பிற்கு வருவாய்த்துறையினர் அபராதம் விதித்தனர்.
ஆற்காடு தாசில்தார் காமாட்சி உத்தரவின்பேரில் மண்டல துணை தாசில்தார் வரலட்சுமி தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் சுரேஷ், வினோத் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று ஆற்காடு- வேலூர் மெயின் ரோடில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது, முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் விற்பனை நடப்பது தெரியவந்தது.
எனவே, அந்த மெடிக்கல் ஷாப்பிற்கு 12,500 அபராதம் விதித்தனர். மேலும், முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு தலா 1200 அபராதம் விதித்தனர். அதன்படி, கொரோனா நோய்த்தடுப்பு விதிமுறை களை கடைபிடிக்காத வர்களிடம் மொத்தம் {11,500 அபராதம் வசூ லிக்கப்பட்டது.
மேலும், அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடை வெளியை கடைபிடித்து கொரோனா பரவலை தடுக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.