ராணிப்பேட்டை பகுதியில் கொரோனா பொது முடக்கத்தால் ராணிப்பேட்டை முத்துக்கடை நான்கு சாலை சந்திப்பில் வாகனங்கள் ஏதுமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது.
இதேபோல் பஜார் வீதிகளில் கடைகள் வணிக நிறுவனங்கள் மூடிக் கிடக்கின்றது. பெட்ரோல் நிலையங்கள், மருந்து கடைகளைத் திறந்துள்ளனர்.
அத்தியாவசிய தேவைக்காக ஓரிரு வாகனங்கள் செல்கின்றன. தேவை இல்லாமல் வரும் வாகனங்கள் மடக்கி விசாரித்துப் போலீசார் வழக்கு பதிவு செய்கின்றனர்.