ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அனந்தலை கிராமத்தைச் சேர்ந்த ஞானவேல். இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார்.

கடந்த 12ஆம் தேதி மது போதையில் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். மனைவி ஞானவேலை கண்டித்துள்ளார். இதனால் மன வருத்தத்திற்கு ஆளானார் ஞானவேல் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வாலாஜா பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.