கே. வி. குப்பம் அருகே தேர்தல் பறக்கும் படை வாகன விபத்தில் பெண் தலைமை காவலர் உயிரிழந்தார்.

 
வேலூர் மாவட்டம் கே. வி. குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே தேர்தல் பறக்கும்படை சென்ற கார் மீது எதிரே வந்த லாரி மோதிய விபத்தில் பறக்கும்படை குழுவில் இருந்த வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் தலைமை காவலர் மாலாதி உயிரிழந்தார்.

மேலும் காரில் இருந்த ஒளிப்பதிவாளர் பிரகாஷம், மத்திய பிரதேச போலீஸ் மனோஜ் ஆகிய இருவர் படுகாயத்துடன் குடியாத்தம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் வேலூர் சரக டிஐஜி காமினி மற்றும் மாவட்ட எஸ்பி செல்வகுமார் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த பெண் காவலருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.