கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவி மிகப்பெரிய உயிர் சேதத்தை உலகில் ஏற்படுத்தியது. பல்வேறு நாடுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இந்தியாவிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்தது.
பின்னர், படிப்படியாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா உருமாறி இருப்பதாகவும், அது பலருக்கும் பரவி உயிர் கொல்லியாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் உருமாறிய கொரோனா உங்களை பாதித்து உள்ளதா என்பதை கண்டறிய கீழ்காணும் அறிகுறிகள் உதவலாம். உருமாறிய கொரோனா வைரஸ் வாய் வழியாக எளிதாக பரவி வருகிறது.

அவை, பல் இடுக்கு, பற்குழி, நாக்கு பகுதி, தொண்டை உள்ளிட்ட பகுதிகளில் அமர்ந்து பெருகுகிறது. எனவே வாய்ப்புண், வாய் நாற்றம், வாயின் மேல் தாடை பகுதியில் எரிச்சல், தொண்டைப்புண் நாக்கின் மேல் வெடிப்பு, வீக்கம், வரட்சி, வாய் அலர்ஜி உள்ளிட்டவை ஏற்படும்.

உடல் சோர்வு, உடல் வலி, தலை சுற்றல் ஆகியவை இருக்கும். நாம் மிகவும் பலவீனமாக இருப்பது போல தோன்றும்.
எப்பொழுதும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அத்துடன் குமட்டல், உடல்நலக் குறைவு ஏற்படுவதுபோல இருக்கும்.

தசைகளில் ஒருவித வலி, உடல் வீக்கம், மூட்டுவலி ஆகியவை இருக்கும் திடீரென்று சோம்பலாக வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும். இது போன்ற அறிகுறிகள் இருந்தால் கொரோனா வைரஸ் உரு மாற்றம் உங்களை தாக்கி இருக்கக் கூடும்.
எனவே உடனடியாக ஓய்வு எடுத்துக்கொண்டு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.