தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி - அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல்!
இரவு 10 மணி முதல் 4மணி வரை ஆட்டோ டாக்சி இயங்க தடை 

தனியார் பொது போக்குவரத்து அனைத்தும் தடை

மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்
பால் , பத்திரிகை விநியோகம் , ஆம்புலன்ஸ் , அமரர் ஊர்தி சரக்கு வாகனத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அனுமதி

மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ , டாக்ஸி போன்றவை அனுமதிக்கப்படும்

அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி 

தனியார் நிறுவன இரவு காவல் பணியில் ஈடுபடுவோர் வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று திரும்ப அனுமதி

இரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி

சுற்றுலாத் தலங்களுக்கு உள்ளூர் , வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனைத்து நாட்களுக்கும் தடை

அனைத்து கடற்கரைப் பகுதிகளுக்கும் அனைத்து நாட்களுக்கும் பொதுமக்கள் செல்லத் தடை

பெட்ரோல் , டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்

தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் 50 % பேர் வீட்டிலிருந்தே பணிபுரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

டாஸ்மாக் கடைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை

ஞாயிற்றுக்கிழமைகளில், ஸ்விக்கி, ஜொமாடோ போன்ற டெலிவரி பயன்பாடுகள் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் 12 பிஎம் முதல் மாலை 3 மணி வரையிலும் 6 பிஎம் முதல் 9 பிஎம் வரையிலும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இ-காமர்ஸ் விநியோகங்கள் இல்லை

அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு