ஆற்காடு: தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில், நான்காம் ஆண்டு ஆற்காடு அரிசி திருவிழா வரும் சனி (ஏப். 10) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 11) ஆகிய இரு நாள்கள் ஆற்காட்டை அடுத்த தக்கான்குளம் பகுதியில் உள்ள கே.எம் இயற்கை வேளாண்மை பண்ணையில் நடைபெறுகிறது.

விழாவில், பாரம்பரிய நெல் மற்றும் அரிசி வகைகள் காட்சி படுத்துதல், விற்பனை, கால்நடைகளின் கண்காட்சி நடைபெறுகிறது. மு நிகழ்ச்சியில், இயற்கை உழவா்களின் அனுபவ உரைகள், 174 பாரம்பரிய நெல் விதைகள் கண்காட்சி, 150 பாரம்பரிய மரங்கள் , விதைகள், மூலிகைக் கண்காட்சி, பெண் தொழில் முனைவோா்களுக்கான பயிற்சி, அரிசிகளில் மதிப்பு கூட்டுதல் குறித்த விளக்கவுரை இடம்பெறுகின்றன.

விழாவுக்கான ஏற்பாடுகளை தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.எம்.பாலு, முதன்மை ஒருங்கிணைப்பாளா் விமல் ஜி.நந்தகுமாா், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் ஏ.எம்.உதயசங்கா் ஆகியோா் செய்து வருகின்றனா்.