குறள் : 320
நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

மு.வ உரை :
துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.

கலைஞர் உரை :
தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.

சாலமன் பாப்பையா உரை :
செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.

Kural 320
Noyellaam Noiseydhaar Melavaam Noiseyyaar
Noyinmai Ventu Pavar

Explanation :
Sorrow will come upon those who cause pain to others; therfore those who desire to be free from sorrow give no pain to others

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்
22-03-2021, பங்குனி 09, திங்கட்கிழமை, அஷ்டமி திதி காலை 09.00 வரை பின்பு வளர்பிறை நவமி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 09.27 வரை பின்பு புனர்பூசம். சித்தயோகம் இரவு 09.27 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். 

இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

இன்றைய ராசிப்பலன் - 22.03.2021

மேஷம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வருகையால் மனமகிழ்ச்சி கூடும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

ரிஷபம்
இன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துகளால் நற்பலன்கள் உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிட்டும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

மிதுனம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கடகம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். பணத் தேவைகள் சற்று அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகள் நல்ல முன்னேற்றத்தை உண்டாக்கும்.

சிம்மம்
இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நற்பலனை தரும். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிட்டும்.

கன்னி
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் அடைவீர்கள்.

துலாம்
இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

விருச்சிகம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் கவனம் தேவை.

தனுசு
இன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்வுகள் நடைப்பெறும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.

மகரம்
இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் வளர்ச்சிக்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

கும்பம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் பெரிய பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. 

மீனம்
இன்று உங்களுக்கு மன அமைதி குறையலாம். உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பயணங்களால் உடல் சோர்வு ஏற்பட்டாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பணப்பிரச்சினை தீரும்.