குறள் : 310
இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

மு.வ உரை :
சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர் சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.

கலைஞர் உரை :
எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.

சாலமன் பாப்பையா உரை :
பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே.

Kural 310
Irandhaar Irandhaar Anaiyar Sinaththaith
Thurandhaar Thurandhaar Thunai

Explanation :
Those who give way to excessive anger are no better than dead men; but those who are freed from it are equal to those who are freed (from death)

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்
12-03-2021, மாசி 28, வெள்ளிக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 03.03 வரை பின்பு அமாவாசை. சதயம் நட்சத்திரம் இரவு 10.51 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. அம்மன் வழிபாடு நல்லது. போதாயன அமாவாசை. 

இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

இன்றைய ராசிப்பலன் - 12.03.2021

மேஷம்
இன்று வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் குறைந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும். 

ரிஷபம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். பிள்ளைகள் பெருமை சேரும் படி நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலர் புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள்.

மிதுனம்
இன்று வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். கடன் பிரச்சினைகளால் மன அமைதி குறையும். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கடகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி கொடுத்த பொறுப்புகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலிலும் நிதானம் தேவை. பயணங்களை தவிர்க்கவும்.

சிம்மம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு தொழிலில் முன்னேற்றத்தை காணலாம். வராத வெளிகடன்கள் வசூலாகும். வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலங்கள் உண்டாகும்.

கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் எல்லாம் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் வெளிவட்டார நட்பு உண்டாகும். உடல் நிலை சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

துலாம்
இன்று குடும்பத்தினரின் மாற்று கருத்தால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் அலைச்சல்கள் இருந்தாலும் நற்பலன்கள் ஏற்படும். வருமானம் பெருகும். 

விருச்சிகம்
இன்று உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மனைவி வழியாக நல்லது நடக்கும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். கடன்கள் குறையும்.

தனுசு
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே நல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்களால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். சிலருக்கு உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

மகரம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். வெளி பயணங்களில் கவனம் தேவை. தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் மறையும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிட்டும்.

கும்பம்
இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். எதிர்பார்த்த வங்கி உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன்கள் கிட்டும்.

மீனம்
இன்று காலையிலே இனிய செய்தி வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். சிலருக்கு தொழில் சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.