குறள் : 309
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி யெனின்.

மு.வ உரை :
ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.

கலைஞர் உரை :
உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.

சாலமன் பாப்பையா உரை :
உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.

Kural 309
Ulliya Thellaam Utaneydhum Ullaththaal
Ullaan Vekuli Enin

Explanation :
If a man never indulges anger in his heart he will at once obtain whatever he has thought of

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

11-03-2021, மாசி 27, வியாழக்கிழமை, திரியோதசி திதி பகல் 02.40 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 09.45 வரை பின்பு சதயம். சித்தயோகம் இரவு 09.45 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மஹா சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

இன்றைய ராசிப்பலன் - 11.03.2021

மேஷம்

இன்று உங்களுக்கு தாராள தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். பிள்ளைகளுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.

ரிஷபம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ப வாய்ப்புகள் அமையும்.

மிதுனம்
இன்று உங்களுக்கு மனதில் குழப்பம், தேவையற்ற கவலை உண்டாகும். வீண் பிரச்சினைகள் தேடி வரும். உங்கள் ராசிக்கு காலை 09.21 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும் என்றாலும் மதியத்திற்கு பிறகு சாதகப் பலன் கிடைக்கும்.

கடகம்
இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு காலை 09.21 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. 

சிம்மம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். புத்திர வழியில் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் அலைச்சலுக்குப் பின் அனுகூலம் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும். நினைத்த காரியம் நிறைவேறும்.

கன்னி
இன்று குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள்.

துலாம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் நிலை ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால் குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்
இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைப்பதில் சில தடைகள் ஏற்படலாம். எதையும் யோசித்து செய்வது நல்லது. உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

தனுசு
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மகரம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களால் செலவுகள் அதிகமாகும். சேமிப்பு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.

கும்பம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பூர்வீக சொத்து விஷயமாக அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.

மீனம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சகோதர, சகோதரிகளுடன் சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை ஏற்படும்.