குறள் : 307
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

மு.வ உரை :
(தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல் நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.

கலைஞர் உரை :
நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை :
நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.

Kural 307
Sinaththaip Porulendru Kontavan Ketu
Nilaththaraindhaan Kaipizhaiyaa Thatru

Explanation :
Destruction will come upon him who ragards anger as a good thing as surely as the hand of him who strikes the ground will not fail



இன்றைய பஞ்சாங்கம்
09-03-2021, மாசி 25, செவ்வாய்க்கிழமை, ஏகாதசி திதி பகல் 03.02 வரை பின்பு தேய்பிறை துவாதசி. உத்திராடம் நட்சத்திரம் இரவு 08.41 வரை பின்பு திருவோணம். பிரபலாரிஷ்ட யோகம் இரவு 08.41 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. 

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் - 09.03.2021

மேஷம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழச்சி நடைபெறும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் மன அமைதி குறைவதற்கான சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதநிலை ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள்.

மிதுனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும். வியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

கடகம்
இன்று பிள்ளைகளுடன் இருந்த மன ஸ்தாபம் நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை கூடும். உத்தியோகஸ்தர்கள் புது உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உருவாகும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். 

சிம்மம்
இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட திறமையுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சினைகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வருமானம் பெருகும்.

கன்னி
இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தினருடன் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் கிட்டும்.

துலாம்
இன்று உங்கள் உடல் நிலையில் சற்று மந்த நிலை உண்டாகலாம். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். எதிலும் நிதானம் தேவை.

விருச்சிகம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.

தனுசு
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உற்றார் உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். 

மகரம்
இன்று நீங்கள் செய்யும் செயலில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வங்கி சேமிப்பு உயரும். பழைய கடன்கள் வசூலாகும். 

கும்பம்
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை அடையலாம். எதிலும் பொறுமை தேவை.

மீனம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியில் முடியும். சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்பட்டு மகிழ்ச்சி நிலவும்.

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,