குறள் : 305
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
மு.வ உரை :
ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும் காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.
கலைஞர் உரை :
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.
சாலமன் பாப்பையா உரை :
தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்.
Kural 305
Thannaiththaan Kaakkin Sinangaakka Kaavaakkaal
Thannaiye Kollunj Chinam
Explanation :
If a man would guard himself let him guard against anger; if he do not guard it anger will kill him
இன்றைய பஞ்சாங்கம்
08-03-2021, மாசி 24, திங்கட்கிழமை, தசமி திதி பகல் 03.45 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. பூராடம் நட்சத்திரம் இரவு 08.40 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் - 08.03.2021
மேஷம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.
ரிஷபம்
இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை.
மிதுனம்
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பெரிய மனிதர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். உடன் பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும்.
கடகம்
இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். பொன் பொருள் வாங்கும் யோகம் அமையும்.
சிம்மம்
இன்று செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும். மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன் பிரச்சினை தீரும். தொழிலில் சிறுசிறு மாற்றங்கள் செய்து லாபம் அடைவீர்கள்.
கன்னி
இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். உறவினர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.
துலாம்
இன்று உங்களுக்கு பணவரவிற்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
விருச்சிகம்
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெற்றோரிடம் வீண் மன-ஸ்தாபங்கள் உண்டாகும். மன அமைதி குறையும். உத்தியோகத்தில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப்பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும்.
தனுசு
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்படைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவு கிட்டும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வருமானம் பெருகும்.
மகரம்
இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சினைகளை குறைக்கலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் உயர்வு கிட்டும்.
கும்பம்
இன்று உறவினர்களால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். பணப்புழக்கம் அதிகமாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.
மீனம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் அனு-கூலப் பலன்கள் கிட்டும். சுபகாரியம் கைகூடும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
cell: 0091 7200163001. 9383763001,