சென்னை : வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் இ - பாஸ் கட்டாயம் : தமிழக அரசு அறிவித்துள்ளது .
ஆந்திரா , புதுச்சேரி , கர்நாடக மாநிலங்கள் தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கும் இ - பாஸ் கட்டாயம் எனவும் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது . அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன . அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால் , மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது . அதன்படி தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஊரடங்கு காலகட்டத்தின் போது மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இபாஸ் கட்டாயம் அறிவிக்கப்பட்டிருந்தது . அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் , அதனை தமிழக அரசு ரத்து செய்தது . இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வரும் நிலையில் , ஆந்திரா , புதுச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது . மேலும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் இ - பாஸ் கட்டாயம் என்று தெரிவித்துள்ளது .