ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்க புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. 
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவித்ததைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. 

இதையடுத்து பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனு பட்டியல் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை செலுத்தி வருகின்றனர்.