ராணிப்பேட்டை மாவட்டத்தில் மார்ச்  8-ஆம் தேதி சர்வதேச மகளிர் நாள் விழாவை தேர்தல் விழிப்புணர்வு நாளாக கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு, அதில் பெண்கள் மாதிரி வாக்குப்பதிவு மையத்தில் வாக்குகளை பதிவு  செய்தனர்.


இந்த விழாவில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ச.உமா, மாவட்ட வருவாய் அலுவலர் என் ஜெயச்சந்திரன், ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ஜெயராமன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.