ராணிப்பேட்டை: கூட்டுறவு கடன் சங்கத்தின் மகளிர் குழுவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சுமைதாங்கி கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டனர்.

 
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி கூட்டுறவு கடன் சங்கத்தை அதே பகுதியை சேர்ந்த மகளிர் குழுவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குழுவிற்கு கிடைக்க வேண்டிய தொகையை தள்ளுபடி செய்ய கோரி சுமைதாங்கி கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் போலிசார் அங்கு அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் கணக்கில் எந்த பணமும் இல்லை எனவும் அடுத்த மாதம் தான் அவர்களுக்கு கடன் கிடக்கிறது என்று கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.