வேலூர் மாவட்டம் , காட்பாடி யாதுமானவர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி ( 57 ) . இவர் தனது மனைவி ஜேக்லைன் பேபி ( 53) , மகன் பாலவிக்னேஷ்வரன் ( 26 ) மற்றும் மகளு டன் சென்னையில் இருந்து கார் மூலம் வேலூர் நோக்கி கடந்த 3 ம் தேதி இரவு வந்து கொண்டு இருந்தார் . காரை மகன் பாலவிக்னேஷ்வரன் ஓட்டி வந்தார் . 

அப்போது காவேரிப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்தபோது , முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார் . இதனால் லாரியின் பின்னால் சென்று கொண்டிருந்த பால விக்னேஷ்வரன் பிரேக் போட்டுள்ளார் . அப்போது காரின் பின்னால் வந்த டிப்பர் லாரி கார் மீது வேகமாக மோதியது . இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஜேக்லைன்பேபி லேசான காயமடைந்து மயக்க மடைந்தார் . 

தகவலறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . பின்னர் அங்கு பரிசோதித்த டாக்டர் ஜேக்லைன் பேபி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார் .