காவேரிப்பாக்கத்திலேயே நெல்கொள்முதல் நிலையம் ஏற்படுத்த வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
காவேரிப்பாக்கம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர் . அவ்வாறு விவசாயம் செய்த நெல்களை நீண்ட தூரத்தில் உள்ள காஞ்சிபுரத்திற்கு சென்று விற்பனை செய்துவருகின்றனர். இதனால் விவசாயிகள் சென்றுவர மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் , காவேரிப்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் காவேரிப்பாக்கத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் , இதுநாள் வரை எந்த ஒரு நடவ டிக்கையும் எடுக்கவில்லையாம்.
ஆனால் தருமநீதி , தச்சம்பட்டறை , மேலப்புலம்புதூர் , அசநெல்லிகுப்பம் , திருமால்பூர் , சிறுகரும்பூர் , சிவத்தஞ்சி , அவளூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகளுக்கு , அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர் . இது காவேரிப்பாக்கம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . மேலும் , காவேரிப்பாக்கம் பகுதியில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டால் , காவேரிப்பாக்கம் , கட்டளை , சுமைதாங்கி , கடப்பேரி , ராமாபுரம் , பெரியகிராமம் , அபிராமச்சேரி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுவர்.
எனவே மாவட்ட நிர்வாகம் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு , காவேரிப் பாக்கம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி விவசாயிகளின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது .