திருச்சி: திருச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக திவ்யதர்ஷிணி சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.
திருச்சியில் தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ரூ.1 கோடி பிடிபட்ட விவகாரத்தில் தோ்தல் பாா்வையாளா் அறிக்கையை அடுத்து மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு , உதவி ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்டக் கண்காணிப்பாளா் பி. ராஜன் ஆகியோா் தோ்தல் அல்லாத பணிக்கு மாற்றப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து திருச்சி மாவட்ட புதிய ஆட்சியராக திவ்யதர்ஷிணியை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 2011ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர். கோவை, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் பணிபுரிந்தவர். திருச்சி ஆட்சியராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சிக்கு சனிக்கிழமை வருகை தந்தார். அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த அவர், ஆட்சியர் அலுவலகத்திற்கு சனிக்கிழமை காலை 10.45 மணிக்கு வந்து பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற திவ்யதர்ஷிணிக்கு பல்வேறு துறையைச் சேர்ந்த மாவட்ட நிலை அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.