பாணாவரம் காப்புக் காட்டில் இருந்து தண்ணீர் தேடி அன்வர்திகான்பேட்டை கடைவீதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த மானை பொதுமக்கள் பிடித்து வனத்து றையினரிடம் ஒப்படைத்தனர் .
பாணாவரம் காப்புக் காட்டில் இருந்து தண்ணீர் தேடி வழிதவறி வந்த 2 மான்கள் , அன்வர்திகான்பேட்டை கடைவீதியில் அங்கும் , இங்கும் நேற்று காலை சுற்றிக் கொண்டு இருந்துள்ளன . 

இதனை பார்த்த அங்கிருந்த வியாபாரிகள் , பொது மக்கள் புள்ளி மான்களை பிடிக்க முயன்றனர் . அதில் , ஒரு மான் பிடிப்பட்டது ,மற்றொருமான் அங்கிருந்து தப்பி சென்றது . இதையடுத்து , பாணாவரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் . 

அதன்பேரில் , வனக்காவலர் அன்பரசன் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்கள் பிடித்து வைத்திருந்த மானை மீட்டனர் . தொடர்ந்து , பாணாவரம் காப்பு காட்டில் கொண்டு சென்றுவிட்டனர் .