தொழிலாளி தற்கொலை ராணிப்பேட்டை , 
ராணிப்பேட்டை நவல்பூர் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் ( 49 ) , கூலி தொழிலாளி . இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தாராம். 

இந்நிலையில் குடி போதையில் இருந்த சண்முகம் கடந்த 17 ம் தேதி இரவு வீட்டில் ஓர் அறையில் பேனில் கயிற்றால் தூக்கு போட்டுக்கொண்டுள்ளார் . இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் . 

மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் . அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார் . இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .