வாலாஜா அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட எஸ்பி

கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 14 ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டது . சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது . அதன்படி வாலாஜா அரசு மருத்துவமனை மூலமாக 1010 பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது . 

மேலும் கடந்த 1 ம் தேதி முதல் 60 வயது மேற்பட்டவர்களுக்கும் கொரோனாதடுப்பூசி போடப்பட்டு வருகிறது . இதைத்தொடர்ந்து எஸ்பி சிவக்குமார் நேற்று வாலாஜா அரசுமருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் . 

அவருடன் காவல் துறை பணியாளர்களும் போட்டு கொண்டனர் . அப்போது மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சிங்காரவேல் , கொரோனா தடுப்பூசி அலுவலர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர் .